அதிமதுரம் (Glycyrrhiza glabra) உலகம் முழுவதும் பாரம்பரிய சித்த மருத்துவ முறைகளில் பயன்படுத்தப்பட்டு வரும் அற்புத மூலிகை. சீன மருத்துவத்தில் இதனை ‘முதன்மை மருந்து’ என்றும், சித்த மருத்துவத்தில் பித்த கப நோய்களுக்கு சிறந்தது என்றும் நம்பப்படுகிறது
தன்மைகள்
1. இனிப்புச் சுவை கொண்டது (Glykys = Sweet + Rhiza = Root).
2. சுவை இனிப்பாக இருந்தாலும், கசப்பை மறைக்கும் தன்மை உடையது.
நீண்ட நேரம் நாவில், தொண்டையில் இனிப்பை நிலைநிறுத்தும்.
3.எச்சில் சுரப்பை அதிகரித்து, நாவறட்சியை குணமாக்கும்
வேதிப் பொருட்கள் (Chemical Constituents)
அதிமதுரத்தில் உள்ள முக்கிய சத்துக்கள் கிளைசிரைசின் (Glycyrrhizin), அஸ்பராஜின்,
ஸ்டார்ச், சர்க்கரைப்பொருள்
அமிலரெசின், பிசின்,மியூஸிலேஜ் (கொழகொழப்பு தன்மை, கால்சியம், மக்னீசியம் உப்புகள், டானின்.
செயல்பாட்டு மூலப்பொருள் (Active principle): Glycyrrhetinic acid. இதுவே Carbenoxolone Sodium என்ற மருந்தின் அடிப்படையாக நவீன மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
சித்த மருத்துவத்தில் அதிமதுரத்தின் பயன்கள்
கத்தியரி முப்பிணியால் வருபுண் தாகங் கண்ணோயுன் மாதம்விக்கல் வலிவெண் குட்டம்
பித்தமெலும் புருக்கிச் சரமா வர்த்த பித்தமத மூர்ச்சைவிட பாகம் வெப்பந் தத்திவரு வாதசோ ணித்ங்கா மாலை சருவவிடங் காமியநோய் தாது நட்டங் குத்திரும லாசியங்க மிதழ்நோ யிந்து குயப்புணும்போ மதூக மெனக கூருங்காலே .
-பதார்த்த குண விளக்கம்.
குணம் :
அதிமதுரத்தினால், ஆயுதங்களினால் வரும் விரணம் நாவறட்சி, கண்நோய், விக்கல், வெண்குட்டம், பைத்தியம், எலும்புருக்கி, கிரிச்சரம்,மதமூர்ச்சை, விஷங்கள், காமாலை, இருமல்,சிரநோய், சுரம் ஆகியவை தீரும்.


அதிமதுரம் பயன்கள் (Athimathuram Benefits)
- இருமல் & தொண்டைநோய்– அதிமதுரத்தை இடித்து பொடியாக்கி அதில் 2–4 கிராம் தேனில் கலந்து எடுத்தால் குணம்.
- மலக்கட்டு – அதிமதுர சூரணம் + சோம்பு சூரணம் சேர்த்து, பாலில் கலந்து குடிக்கலாம்.
- தொண்டைக்கட்டு, குரல் கமறல் – அதிமதுர துண்டை வாயில் அடக்கி வைத்தால் கிருமிகளை கட்டுப்படுத்தும்.
- குடற்புண் – சந்தனத்துடன் சம அளவு அதிமதுரப் பொடி சேர்த்து எடுத்தால் குணமாகும்.
- அதிமதுர பால் – அதிமதுரத்தை ஊறவைத்து அரைத்து, தேங்காய்ப்பால், சுக்கு, பனைவெல்லம் சேர்த்து தயாரித்து குடித்தால் வயிற்றுப் புண் குறையும்.
- அதிமதுரம் லேகியம்:
அதிமதுரம் – 75 கிராம், பசும்பால் – 750 மி.லிட்டர்,பசுநெய் 750மி.லிட்டர், நாட்டு சர்க்கரை 750கிராம் இவைகளை முறைப்படி இலேகியம் செய்து,
கொட்டைப் பாக்களவு தினமிருவேளை கொடுத்துவர,
சிறுநீர் எரிச்சல் , நீங்கும்
அதிமதுரத்தின் ஆய்வுகள் மற்றும் நன்மைகள்
- Anti-ulcer activity – வயிற்றுப் புண் ஆறுவதை விரைவுபடுத்துகிறது.
- DGL (Deglycyrrhizinated liquorice) – குடற்புண்ணை ஆற்றுவதற்காக நவீன மருத்துவத்தில் தனிப்பட்ட மருந்தாக தயாரிக்கப்படுகிறது.
- Mucosal Protection – வயிறு, குடல் சுவர்களில் பாதுகாப்புக் கவசம் அமைத்து அமிலத் தாக்கத்திலிருந்து காக்கிறது.
- Prostaglandin Activation – புண்களை விரைவில் ஆற்ற உதவுகிறது.
- COVID-19 Research – 2002ல் ஏற்பட்ட SARS virus மீது அதிமதுரம் பயனுள்ளதாக இருந்ததால், COVID-19க்கு எதிரான ஆய்வுகளும் நடந்து வருகின்றன.
- நாவறட்சி மற்றும் தாகம் – எச்சில் சுரப்பை அதிகரித்து தாகத்தை தணிக்கிறது.
- குருதி அழுத்தம் (Blood Pressure) – 1960களில் நடந்த ஆய்வுகள் அதிமதுரம் கார்டிசோல் சமநிலையைச் சீராக்கி, ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது என நிரூபித்துள்ளன.
- வலிப்பு நோய் (Epilepsy) – நடந்து வரும் ஆராய்ச்சிகள் அதிமதுரம் வலிப்பு நோய்க்கு உதவலாம் என தெரிவிக்கின்றன.
- Antiviral Property – சில வைரஸ்களின் வீரியத்தை குறைக்கும் திறன் உள்ளது
- சமீபத்திய ஆராய்ச்சிகள் அதிமதுரத்தில் இம்யூன் சிஸ்டம் மேம்படுத்தும் திறன் மற்றும் ஆன்டிவைரல் செயல்பாடு கொண்டது என்று உறுதிப்படுத்தியுள்ளன
முடிவுரை
அதிமதுரம் (Athimathuram) சித்த மருத்துவத்திலும் நவீன மருத்துவத்திலும் பெரும் முக்கியத்துவம் வாய்ந்த மூலிகை. பல்வேறு நோய்களில் அதிமதுரம் பயன்படுகிறது. நவீன ஆய்வுகளும் அதிமதுரத்தின் பலத்தைக் காட்டுவதால், இது எதிர்கால மருத்துவத்தில் முக்கிய பங்கு வகிக்கும்.


Dr. Augastina B.S.M.S., PGDY, is a passionate Siddha Doctor with a heart of gold. She believes in healing one step at a time. In her writing, you’ll find not just knowledge, but genuine care and a holistic approach to health and well-being.

